திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலி உயிரிழந்த நிலையில் காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரேணுகாதேவி (வயது 28) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். வடக்குத் தெருவைச் சேர்ந்த தனபால் மகன் கோபிநாத் (வயது 30) என்பவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது.
வேலைக்கு சென்ற ரேணுகா இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.அக்கம் பக்கத்தினர் உதவியோடு தேடிய போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூர் ரயில்வேகேட் அருகே ரேணுகாதேவியும் கோபிநாத்தும் விஷமருந்தி கிடந்துள்ளனர்.
விஷம் அருந்தியதில் ரேணுகாதேவி இறந்துவிட்டார், ஆபத்தான நிலையில் கோபிநாத் நன்னிலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.