காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) இரவு கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்திற்கு வந்த காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கிரியாகஸ்வெவ, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த வனஜீவராசிகள் அதிகாரி ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் தலைவராக கடமையாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.