திருகோணமலை – சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆதியம்மன்கேணி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றைப் பகுதியளவில் தாக்கி வீட்டிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூலித்தொழில் செய்து ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்தும் நாம் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதால் இதற்குரிய நஷ்டஈட்டினையும், யானைப் பாதுகாப்பு வேலியையும் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
யானைகளுக்கு ஏதாவது நடந்தால் ஓடோடி வரும் அதிகாரிகள், யானைகள் மனிதர்களையோ எமது உடமைகளையோ சேதப்படுத்தினால் அதனைக் கண்டு கொள்வதில்லையென விசனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தமது கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் ஆதியம்மன்கேணி கிராமமக்கள் கூறியுள்ளனர்.