கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.அனாகிஷா ஷன்சைன் தாமஸ் என்ற 15 வயதான சிறுமி கடந்த மாதம் 19ஆம் திகதி மணிடோபாவின் பெகுயிஸ் மாலில் இறக்கிவிடப்பட்டார்.
இதன்பின்னர் அனாகிஷா காணாமல் போயிருக்கிறார்.அங்கிருந்து அவர் வின்னிபெக்கிற்கு சென்றிருக்கலாம் எனவும் அங்கு அவர் தற்போது இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.
180 பவுண்ட் எடை கொண்ட அனாகிஷாவை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.