கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டா நாட்டைச் சேர்ந்நத 43 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
அவரை சோதனையிட்டபோது அவரது வயிற்றிலிருந்து 17 கொக்கைன் போதைப்பொருள் குளிசைகள் விழுங்கியிருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இது சந்தை மதிப்பில் 12 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உகண்டாவில் இருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது