மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 30 லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று (06) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைக் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்தார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகலவல் ஒன்றிற்கமைய கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை நேற்று முற்றுகையிட்டனர். இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பை மீட்டதுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
அதேவேளை வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் நேற்று பெண் ஒருவரை கஞ்சாவுடன் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.