மணமகன் காதலியுடன் ஓடியதால் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடியுள்ளார். இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார். அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.
மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார்.
தமது பிரச்சனை தீர்ந்தால் போதும் என பெண்ணைப்பெற்ற தாய் தந்தையர் நினைக்கும்வரை, உணர்வற்ற ஜீவன்களாக பெண்பிள்ளைகளை கட்டிக் கடலில்தள்ளும் படலம் அரங்கேறுவதை தடுத்திட முடியாது.
மனசைக்கொன்று திருப்தியில்லாத வாழ்வை வாழ்வதைக்காட்டுலும் வாழாவெட்டியாக நின்மதியாக வாழ்ந்து விடலாம்.
பெண்களை பெரும்பாரமாக நினைத்து சீதணச்சிந்தனையில் இருந்து மீண்டெழுவது என்பது 1000 ஆண்டுகள் கடந்தாலும் சாத்தியமில்லை என முகநூலில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.