ஜூன் 11ம் திகதி புதன் மற்றும் சுக்கிர பகவான் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அதாவது புதன் பகவான் புனர்பூச நட்சத்திரத்திலும் சுக்கிர பகவான் பூச நட்சத்திரத்திற்கும் இடம் மாறுகிறார்கள்.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் டபுள் அதிர்ஷ்டம் என்று எல்லாம் டபுளாக கிடைத்த அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லப் போகிறார்கள்.
ஜாக்பொட் காத்திருக்கும் இராசிகள்
ரிஷபம்: புதன் மற்றும் சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு வாழ்க்கையில் இருந்து வந்த சிறு சிறு கசப்புகளும் பிரச்சனைகளும் விலகும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் உதவியும் பெறுவீர்கள். பணி செய்யும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம்: புதன் மற்றும் சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பலன்களை கொடுக்கப் போகிறது. அதாவது இவர்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். திருமண தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் அமையும். உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும் வெளிநாடு பயண மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகவும் சுப பலன்களை கொடுக்கிறது. இவர்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட போகிறார்கள். திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பழைய கடன்கள் அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொறுப்புகளும் பதவி உயர்வும் கிடைக்கக் கூடிய நிலை உருவாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

