வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் 30 மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபர்களும் மீட்கப்பட்ட பொருட்களும் நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

