10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது இந்தியன் பிரிமீயர் லீக் தொடர் 2025 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியன் பிரிமீயர் லீக் 2025 தொடருக்கான ஏலம் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் இறுதி விவரங்களை இன்றையதினம் (31-10-2024) வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், 1. ருதுராஜ் கெய்க்வாட் இந்திய மதிப்பில் (ரூ. 18 கோடி), 2. மதீஷ பத்திரண (ரூ. 13 கோடி), 3. ஷிவம் துபே (ரூ. 12 கோடி), 4. ஜடேஜா (ரூ. 18 கோடி), 5. எம்.எஸ். டோனி (ரூ. 4 கோடி).
மும்பை இந்தியன்ஸ் அணியில், 1. ஹர்திக் பாண்டியா (ரூ. 16.35 கோடி), 2. ரோகித் சர்மா (ரூ. 16.30 கோடி), 3. பும்ரா (ரூ. 18 கோடி), 4. சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி), 5. திலக் வர்மா (ரூ. 8 கோடி)
லக்னோ அணியில், 1. பூரன் (ரூ. 21 கோடி), 2. ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி), 3. மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோசின் கான் (ரூ. 4 கோடி) 5. ஆயுஷ் பதோனி (4 கோடி).
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், 1. பெட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), 2. அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), 3. நிதிஷ் ரெட்டி (ரூ. 6 கோடி), 4. கிளாசன் (ரூ. 23 கோடி), 5. டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி).
குஜராத் டைட்டன்ஸ் அணியில், 1. ரஷித் கான் (ரூ. 18 கோடி), 2. சுப்மன் கில் (ரூ. 16.5 கோடி), 3. சாய் சுதர்சன் (ரூ. 8.5 கோடி), 4. ராகுல் தெவாட்டியா (ரூ. 4 கோடி), 5. ஷாருக் கான் (ரூ. 4 கோடி)
பஞ்சாப் கிங்ஸ் அணியில், 1. ஷஷாங்க் சிங் (ரூ. 5.5 கோடி), 2. பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 1. ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), 2. சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), 3 சுனில் நரைன் (ரூ. 12 கோடி), 4. ரஸல் (ரூ. 12 கோடி), 5. ஹர்சித் ரானா (ரூ. 4 கோடி). 5. ராமன்தீப் சிங் (ரூ. 4 கோடி).
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில், 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 1. விராட் கோலி (ரூ. 21 கோடி), 2.ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), 3. யாஷ் தயாள் (ரூ. 5 கோடி).
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில், 1. அக்சார் பட்டேல் (ரூ. 16.5 கோடி), 2. குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), 3. ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), 4. அபிஷேக் பொரேல் (ரூ. 4 கோடி) ஆகியோரை குறித்த அணிகள் தக்க வைத்துள்ளன.