நவகிரகங்களில் சனி பகவான் மட்டுமே இடப்பெயர்ச்சி எடுத்துக்கொள்வதாக வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. அந்த ராசிகள் எவை என்பதை நாம் இங்கு பார்போம்.
மேஷம்
சனி பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஏழரை சனியின் முதல் கட்டம் என்பதால், நிதி மற்றும் தொழில் ரீதியாக திடீரென்று நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். திடீரென்று பொறுப்புகள் அதிகரிக்கும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால், சனியின் தாக்கம் அவ்வளவு தீவிரமாக இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கும்பம்
அடுத்த ஆண்டு நிகழவுள்ள சனிபெயர்ச்சியால், சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்திற்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது. வாழ்க்கையில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவர்கள், 2025-ம் ஆண்டில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்குவார்கள். அவர்களின் கடின உழைப்புக்கான முழு பலன்களையும் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதனால் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மீனம்
மீன ராசியில் சனி இடப்பெயர்ச்சி அடையும் நிலையில் மீன ராசியினருக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. இந்த கட்டத்தில் சனி பகவான் இந்த ராசியினரின் தொழில், நிதி மற்றும் உறவுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார். இந்த ராசியினரின் பொறுமை அதிகமாக சோதிக்கப்படும். நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மிகவும் கடினமான காலமாக இருக்கும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நேரத்தை அதிகம் செலவிட்டால், எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கலாம்.