பதுளையின் (Badulla) சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்ல மலை உச்சியில் நேற்றுப் பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளில் யாரோ ஒருவர் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறித்த வனப்பகுதியில் தீமூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காற்றின் வேகத்துடன் கடும் வேகத்தில் பரவி வரும் தீ காரணமாக தற்போதைக்கு ஐம்பது ஏக்கருக்கும் மேலான வனப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவத்தின் போது, தீயை அணைப்பதற்காக இராணுவத்தினர், விமானப்படையினர், தீயணைப்புப் படையினர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேற்று நள்ளிரவு வரை கடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தற்போதைக்கு தீ ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.