இலங்கைக்கு எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒமிக்ரோன் திரிபானது பாரிய வேகத்தில் அபாயத்தை ஏற்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நேற்றைய தினம் புதிதாக இனங்காணப்பட்ட 3 தொற்றாளர்கள் உள்பட இலங்கையில் மொத்தம் தற்போது 7 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதை தடுப்பதற்கு பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.