மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான புணாணை பொத்தனையைச் சேர்ந்த உசனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயது சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீடு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் சுவர் மாத்திரம் காணப்பட்ட நிலையில் சீமெந்து கல் சுவர் ஓரத்தில் இருந்து மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் காற்று பலமாக வீசி வரும் நிலையில் சுவர் தீடிரென சரிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிழந்துள்ளதுடன், மற்றைய இருவரும் தெய்வாதீனமான உயிர் தப்பியுள்ளனர்.