உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிலரை 22ம் திகதி இத்தாலிக்கு அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட சிலரை இத்தாலிக்கு அழைத்துச்செல்வதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு காரணமாக நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்களை அழைத்துச்செல்வது குறித்து கரிசனைகள் காணப்படுகின்றன, அவர்களை பராமரிக்கவேண்டும்.
ஆகவே இந்த விடயங்களிற்கு தீர்வை காணவேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலிக்கு செல்லவுள்ளவர்களை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள கிறிஸ்தவமதகுரு ஒருவர் பிரார்த்தனை நிகழ்வொன்றிற்காக அவர்கள் செல்லவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இத்தாலிக்கு அழைத்துசெல்லும் விடயத்தை பல கோணங்களில் அணுகவேண்டியுள்ளது.
அவர்களது மருத்துவநிலையை கருத்தில்கொள்ளவேண்டியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விபரங்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்