தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் உடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பது நமது வாழ்க்ககை முறையாலும் தான்.
இப்படி அதிகரித்த உடல் எடையை சிலர் குறைக்க விரும்புவார்கள். ஆனால் இதில் அவர்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறார்கள். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு இருப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்
பொதுவாக மெலிந்த உடல் பாகம் கொண்டவர்களுக்கு நோய்கள் பெரிதளவில் இருக்காது. நோய்கள் விரைவில் தொற்றாது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து இருப்பவர்களுக்கு நோய்கள் விரைவில் தொற்றும்.
இதற்காக நோய்கள் வராமல் இருப்பதற்கு உடல் எடை குறைக்க வேண்டும் என்ற பெயரில் சில தவறுகளை செய்கின்றனர். அது என்னென்ன தவறுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க ஆரம்பித்தவர்களில் அதிகமானோர் செய்யும் தவறு சாப்பிடாமல் இருப்பது. ஆனால் இப்படி செய்வது தவறாகும்.
இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு நிறையவே ஏற்படுவதுடன் உடலில் பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும்.
உனவே இப்படி ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பதை விட நொறுக்கு தீனி, பாக்கெட் உணவுகள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.
நாம் உண்ணும் உணவில் புரதம் இல்லை என்றால் இது தசை ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதன் காரணமாக எடை இழப்பு பயணத்திற்கு இது ஒரு தடையாக இருக்கும்.
இதனால் உணவை சாப்பிடும் ஆசையும் அதிகரிக்கும். இப்படி இருப்பவர்களுககு உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்மே தவிர ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது.
நீங்கள் தினமும் உண்ணும் உணவில் துரித உணவுகள் நொறுக்கு தீனிகள் இனிப்புகள் பொறித்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக உடலில் பல நோய்களும் வரலாம்.
பொதுவாக தூக்கமின்மை உங்கள் பசியை கட்டுப்படுத்துவதற்கும் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் பசியின் உணர்வுகள் அதிகரிக்கும். இதனால் சாப்பாட்டில் நீங்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுவீர்கள்.
இதன் காரணமாக அதிக கலோரிகளையும் சாப்பிட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் போதுமான தூக்கம் மிகவும் அவசியம்.
எடையை குறைக்க முயற்சிக்கும் போது மன அழுத்தத்திற்கு பலர் ஆளாகிறார்கள். ஆனால் மன அழுத்தம் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதை அதிகரிக்க செய்யும் எனவே உங்களது எடை இழப்பு பயணத்தில் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.
இதற்காக நீங்கள் உங்களுக்கு பிடித்தததை செய்யுங்கள். பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். இதன் காரணமாக உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமான உடலையும் பெறுவீர்கள்.