தற்பேதைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்…
ஆம் உடல் எடை அதிகரித்துவிட்டால், பல நோய்களும் தானாக வந்து விடுகின்றது. பின்பு உடம்பை குறைப்பதற்கு பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஜிம், உடற்பயிற்சி, டயட் என்று எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் உடல்எடை குறையாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதற்கு சுரைக்காய் ஜுஸ் அருமையான பலனைக் கொடுக்கின்றது.
தினமும் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் உடல் எடையை நன்றாகவே குறையும்.
ஏனெனில் உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது சுரைக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருப்பதால் உடம்பிற்கு தேவையான சக்தியையும் கொடுக்கின்றது.
எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் அதிகாலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும் என்று கூறப்படுகிறது.