2021 ஆம் ஆண்டில், உகாண்டாவில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு வர்த்தக அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
உகண்டாவுக்கு அனுப்பப்பட்ட சரக்குகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பல்வேறு கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
2021 பெப்ரவரியில் உகாண்டாவிற்கு 102 மெட்ரிக் டன் அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான கட்டளையை ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பெற்றிருந்தது.
இது முற்றுமுழுதாக வணிகச் செயல்முறையாக இருந்தது, இது விமான நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் அந்நிய செலாவணியை ஈட்ட உதவியதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.
அதேசமயம் சரக்கு துறையின் தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒப்பந்த பொறுப்புகளுக்கமைய சரக்குகளின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.