குட்டி நயன்தாராவாக இளசுகளின் மனதை கட்டிப்போட்ட அனிகாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் – அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார். நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அனிகா சுரேந்திரன் தன்னுடைய 20 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த தினத்தையோட்டி அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் குட்டி நயன்தாராவாக கோலிவுட் ரசிகர்களை தன்வசப்படுத்திய அனிகாவின் சொத்து மதிப்பு 16 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 கோடி அளவில் சம்பளமாக வாங்கிறாராம்.
இளம் நடிகைகளே லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், டாப் நடிகைகளுக்கு இணையாக அனிகா சம்பளம் வாங்கி வருவது தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த அனிகா நாயகியாக நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
“தமிழ் சினிமாவிற்குள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் அனிகாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.