நாட்டிற்கு நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்வெட்டை அமல்ப்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2021) முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பை செலுத்தி இறக்குமதி செய்ததன் பின்னர் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இயக்க முடியும் என நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கு 38 நிலக்கரிக் கப்பல்கள் தேவைப்படுவதாகவும், கடந்த ஆண்டு இருபத்தைந்து நிலக்கரி கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 13 கப்பல்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.