இலங்கையில் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கையில், பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம். எனவே முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.