ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்ல – தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்தையோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்கத்தையும் விரைவாகச் செயற்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
எதிர்ப்பாளர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கும் அதேவேளை, சனிக்கிழமையன்று ஒரு கும்பல் ராஜபக்சவின் இல்லத்தை தாக்கிய வன்முறையை விமர்சித்தது.
இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் முழுமையாக விசாரணை செய்யவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.