அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 18 மாதங்களில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களை ஊக்குவிப்பது குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ஃபேபியன் சால்வியோலி குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் இலங்கை, மனித உரிமைகள் சூழ்நிலையில் ஆழமான சரிவைக் கண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.