நாட்டில் மேலும் மூன்று ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மூவரில் ஒருவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் சூடான் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
33, 35 மற்றும் 47 வயதுடைய குறித்த மூவரும் இம்மாதம் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாட்டில் ஒமிக்ரோனோன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.