லண்டனில் உள்ள ஸ்ரொக் எக்ஸ்சேன்ஜ்க்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சிறிலங்கா அரச தலைவர் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே லண்டனில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் புலிக்கொடிகள், உக்ரைன் கொடிகள் மற்றும் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டாம் என்ற பாதகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களின் இந்த போராட்டத்தில் லண்டனில் வசிக்கும் சில சிங்களவர்களும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கையில் முதலீடு செய்வது எவ்வளவு ஆபாத்தானது என்பது தொடர்பாக விளக்கங்களும் கூறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.