நேற்றையதினம் இலங்கையில் வெடித்த கலவரங்களின் காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் தீவிரமடைந்த கலவரம்! மற்றுமொரு அரசியல்வாதி மரணம்
அவரது வீட்டின் மீது நேற்று இரவு போராட்டக் காரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் சரத் குமார படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தீவிரமடைந்த கலவரம்! மற்றுமொரு அரசியல்வாதி மரணம்
அதேசமயம், நேற்று வெடித்த கலவரங்கள் காரணமாக பல முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன, இவற்றுள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவி இரு வீடுகளும் உள்ளடங்கும்.