இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது புதிய சுகாதார கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் பொது முடக்கம் ஒன்றை செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11-02-2022) காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.