எரிபொருள் விலையேற்றம் காரணமாக மணல் கியூப் ஒன்றின் விலை 21,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் 13,000 ரூபாவாக இருந்த ஒரு கியூப் மணலின் விலை 21,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டணம், மணல் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து கட்டண உயர்வு போன்ற காரணங்களால் மணல் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.