இலங்கையின் பிரபல பத்திரிகை கார்ட்டூன் கதாபாத்திரமான கஜமேன் கதாப்பாத்திரத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் 3D அனிமேஷன் திரைப்படம் நாளை (20) முதல் பார்வையாளர்களுக்குக் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
சானக பெரேராவால் இயக்கப்பட்ட இந்த படைப்பின் முக்கிய கதாப்பத்திரங்களுக்கு இலங்கையின் பிரபல பின்னணி குரல் வழங்குனர்களான சுட்டி மல்லி மற்றும் பொடி மல்லி என அழைக்கப்படும் சுனேத் சித்ரானந்தா மற்றும் காமிந்த பிரியவிராஜ் ஆகியோர் குரல் வழங்கியுள்ளனர்.
கஜமான் படத்தின் திரைக்கதையும் இவர்கள் வசமே உள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ 101 நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான பின்னணி குரல் வழங்குனர்களின் குரல்களுடன் 3D சினிமா தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பமான Motion Capture ஐப் பயன்படுத்தி கஜமேன் திரைப்படத்தை உருவாக்க சுமார் 10 ஆண்டுகள் ஆனது.
இலங்கையர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைச் சேர்த்து, இலங்கையின் முதல் 3D அனிமேஷன் திரைப்படமான கஜமேன் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதைப் பார்க்க எதிர்வரும் சனிக்கிழமை தெரண தொலைக்காட்சியின் விஷேட ´On Topic” நிகழ்ச்சியைப் பார்க்கவும்.