காலி துறைமுகத்திற்கு 105 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் பயணிகள் கப்பலான லீ செம்லைன் நேற்று (07.01.2023) மாலை வந்தடைந்துள்ளது.
உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து காலியை வந்தடைந்ததுடன் திருகோணமலைக்கு புறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் நாளை (09.01.2023) இலங்கையிலிருந்து புறப்படும்.
லீ செம்லைன் என்ற இந்த சொகுசு கப்பலை பொனான்ட் என்ற பிரான்ஸின் நிறுவனம் இயக்கி வருகின்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றும் வகையில் தொடர்ந்தும் இலங்கைக்கு பல சொகுசு கப்பல்கள் வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.