கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.
ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஜப்பான் பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.