நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு கப்பல்களும் புறப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் ஒரு கப்பல் 28,500 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளைக் கொண்டு வரவுள்ளது.
மற்றைய கப்பல் 30,300 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 38,400 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பலை 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனீட்டு பத்திரத்துடன் இன்று இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது