இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டானது இன்னும் 02 வருடங்களுக்கு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி அதற்கு தொடர்புடைய அதிகாரிகளினால் அடிப்படை நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) பெற்றோல் நிலையங்களை, சிறந்த சேவைகளை வழங்கும் முயற்சியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் அடிப்படை நோக்கத்தில் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீளக்கூடிய ஒரே வழி நாட்டையும் அதன் வளங்களையும் விற்பதே என மக்களை நம்ப வைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மின்வெட்டு தொடரும் எனவும் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளார்.