இரண்டு வாள்களுடன் கிளிநொச்சியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் நேற்றையதினம் (12) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முப்படுத்தப்படவுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.