பிரபல மாடலும் நடிகையுமான எமிஜாக்கஷன் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்தவர். இவர் தன்னுடைய மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டார். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் எனபவரால் மதராசபட்டினம் திரைப்படத்தில் துரையம்மா கதாபாத்திரத்திற்கு நடித்தார். இந்த படத் இவரின் கதாபாத்திர நடிப்பிற்காகவே மக்கள் மத்தியில் பிரபலமானது.
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் இவருக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இது தவிர ஹாலிவுட் வெப் தொடரான சூப்பர் கேர்ள் வெப் சீரிஸிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல், ஜார்ஜ் என்பவருடன், லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் எமி ஜாக்சன் வாழ்ந்த நிலையில், இவர்களுக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர், இருவரும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றாலும் இருவருக்கும் இருந்த மனசங்கடத்தால் 2021 ம் ஆண்டு பிரிந்தனர்.
இதனை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வருடங்களாக எட் வெஸ்ட்விக் என்கிற ஹாலிவுட் டிவி நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்ககள் மத்தியில் நடந்தது. இந்த நிலையில் எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
இதை புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் திருமணமான 3 மாதத்திலேயே எமி ஜாக்சன் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இணையவாசிகள் வாழ்த்தும் சிலர் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.