மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர உங்கள் தரப்பு நியாயங்களை அமைதியாக எடுத்துரைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
.மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் காரண, காரியம் இன்றி எதையும் செய்வதற்கு யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் பரஸ்பர ஒற்றுமையுடன் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை மௌனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் மேலிட ஆரம்பிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை மௌனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய தன்னம்பிக்கை மேலும் அதிகரித்து காணப்படும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகளை கடந்து செல்வது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களே உங்களைப் பற்றி அவதூறாகப் பேச வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய போட்டிகள் குறையும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களை மணந்துகொள்ளும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத் தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். நீங்கள் துவங்க இருக்கும் புதிய காரியங்களுக்கு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை சமாளித்து முன்னேறுவீர்கள். பொன் பொருள் சேரும் நாள். ஆரோக்கியம் சிறக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் சில செய்திகள் வரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மென்மேலும் முன்னேறுவார்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.