மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் வெற்றி காண கூடிய அற்புதமான நாளாக இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் விருத்தி அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய நாளாக கடந்து போக இருக்கிறீர்கள். பழைய நினைவுகள் உங்கள் கண்முன்னே வந்து கண்ணீரை வரவழைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு சுபச்செய்திகள் காத்திருக்கிறது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மையான வழியில் நடந்து செல்வதே நல்லது. குறுக்கு வழி தேவையற்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கருத்துகளை உறுதியாக முன் வைப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நான் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பல தடை, தாமதங்கள் ஏற்படலாம். விடாப்பிடியான முயற்சி வெற்றியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலக்கிக் கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பை காண இருக்கிறீர்கள். பல விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் நிச்சயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதால் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலாக செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கூடுமானவரை வெளியிடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன் வைப்பதில் தயக்கம் காட்டுவது கூடாது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். எனவே கூடுமானவரை அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. நேர்மறையான சிந்தனை, இறைவழிபாடு உங்களுக்கு அதிகரித்து காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் வெளியிட பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தலாம். கொடுக்க வேண்டிய பழைய பாக்கிகள் கொடுத்து விடுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும். விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு ஓய்வு தேவை