மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. பேச்சுவார்த்தையில் இனிமை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதன் வளர்ச்சியில் கவனம் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிரமமான வேலை கூட எளிதாக முடியும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உத்வேகத்துடன் செயல்பட கூடிய நாளாக இருக்கிறது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். சுய தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களைப் பற்றிய கவலையை விடுத்து சுய அக்கறை கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. எதிலும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு புதிய விசயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. அனாவசியமாக மற்றவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் எத்தகைய இடர்பாடுகளையும் சரி செய்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இதுவரை நீங்கள் இருந்து வந்த குழப்ப நிலையில் இருந்து மீண்டு வருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் குடும்பத் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இனிய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.