மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற பலன்களை பெற இருக்கிறீர்கள் என்பதால் எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம். ஆரோக்கியம் வலுவாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன்னேற கூடிய அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் குழப்பங்கள் நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சிரமமான வேலை கூட சுலபமாக செய்து முடிக்க கூடிய வல்லமை பிறக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அமைப்பாக இருக்கிறது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் தேவை. எந்தப் பாதையைத் தெரிவு செய்வது என்னும் குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். சுய தொழிலில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைபட்ட திருமண முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இறை வழிபாடுகளில் மீது அதிக ஆர்வம் காணப்படும். குடும்பத்தில் எதிர்பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் செய்யும் செயலில் நிதானம் தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்பாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே யார் பெரியவர்? யார் சிறியவர்? என்கிற ஈகோவை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல நாள் என்பதால் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் வெளியிடம் செல்லும் வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. திடீர் பயணம் செய்யக்கூடிய நல்ல தருணங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நட்பு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்து சென்று தொலை தூர இடங்களில் இருப்பவர்களுக்கு பிரிவு பற்றிய வேதனை இருக்கலாம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி சாதக பலன் கொடுக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு தொலை தூர இடங்களில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து கொள்ளுங்கள்