மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிலும் வெற்றி காணக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். இறைநெறியில் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தியாக கூடிய இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ மௌனம் காப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்க அனைவரும் முயற்சி செய்வீர்கள். சுயதொழியில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய போராடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைபட்ட வேலைகள் சுபமாக முடியும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றி தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு விரும்பியது கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகளை கூடுதலாக சுமக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவியிடையே ஒத்துழைப்பு தேவை. எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும் எனவே நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளிவட்டார தொடர்பு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிரடியான மாற்றம் லாபம் கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகாரப்பூர்வ பொறுப்புகள் கிடைக்க பெறலாம். எதிலும் வாஞ்சையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக கையாளுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அவசரம், பதட்டம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க மாறுபட்ட அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களின் சந்திப்பு அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் இனிய நாளாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வர வேண்டிய பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய கோவத்தால் வம்பு, வழக்குகள் வரக்கூடும் என்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கவலைகள் தீரும் இனிய நாளாக இருக்கிறது. சுபயோக முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமற்ற பலன்களை கொடுக்க கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்களை கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படாமல் இருக்க பொறுமை தேவை. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உழைப்பை கொடுக்க வேண்டிய பொறுப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உழைக்கக்கூடிய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக உழைப்பு தேவை. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.