மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த அமைதி அப்படியே இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் எண்ணங்கள் பலிதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் டென்ஷன் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு வந்து நீங்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனம் தேவை. முன்பின் தெரியாத அவர்களுடைய அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் ரீதியாக முன்னேற்றம் பல போராட்டங்களுக்குப் பிறகு சிறப்பாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய ஆதங்கம் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கண்ணியம் கட்டுப்பாடு உடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்களை நீங்கள் வியப்பில் ஆழ்ந்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வழி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப காட்சியைக் காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி குதூகலம் காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய விஷயங்களை தொடங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கான குள்ளமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்பாக செயல்படக்கூடிய உற்சாகம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் நாகம் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விரும்பியதை அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றியுள்ள போட்டிகளை சமாளிக்கும் வல்லமையை பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். சுபகாரியத் தடைகள் நீங்கி வெற்றியைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை ஆலோசனை இன்றி ஏற்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தினால் நன்மை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் அற்புத வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் இருக்கும் மூத்த அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பலப்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லா நன்மைகளும் நடக்கும் அற்புத நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் போராடிய ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.