மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. முன் கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையோடு செயல்பட்டால் உங்களை வெல்ல யாரும் இல்லை. பேசக்கூடிய வார்த்தைகளில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட்டுக் நல்ல பெயரை வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விரும்பியதை அடைய கூடிய நாள். மகிழ்ச்சி நிறைவாக இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. யார் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு மௌனத்தில் மட்டுமே பதில் சொல்லுங்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் பொறுமையாக இருக்க வேண்டும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் அதை சமாளிக்க கூடிய தெம்பு உங்கள் மனதில் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். யோசித்து நிதானமாக முடிவெடுங்கள்.
சிம்மம்:
சிம்மராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அமையும். பண பரிமாற்றத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையை கவனத்தோடு செய்தால் மட்டும் போதும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். நீங்கள் பேசக்கூடிய பேச்சில் தெளிவு இருக்கும். உங்களுடைய முழு ஆற்றலும் வெளிப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. தேவையற்ற குழப்பங்கள் மனதில் இருக்கும். மனதை ஒரு நிலைப்படுத்தி ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்காது. நீண்ட போராட்டத்திற்குப் பின்பு வெற்றி வாகை சூடுவீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதி அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். துணிச்சலோடு சேர்ந்து கொஞ்சம் கவனமாகவும் செயல்பட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் இன்று ஈடுபடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். நீங்கள் நல்லதே சொன்னாலும் அது அடுத்தவர்களுக்கு கெட்டதாக தான் தெரியும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.