மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் குடும்பத்தின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்டநாள் தீரவே தீராத பிரச்சனைக்கு முடிவு கட்ட கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி உறவு வழுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கலகலப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும் என்பதால் பொருட் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். பெண்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் குறித்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப பிரச்சனைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனரீதியான விஷயத்தில் எதிர்பாராத மாற்றத்தை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். கிடைக்க வேண்டிய கடன் தொகை கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு விஷயங்களில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. தேவையற்ற வார்த்தைகள் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதார்த்தமாக எதையும் எதிர் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டு மழையில் நனைய இருக்கிறீர்கள். எதிர்பாராத வகையில் நீங்கள் செய்யும் சில விஷயங்களில் மற்றவர்களை எளிதாக கவரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறை வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஓரளவிற்கு வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து கவலைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சேமிப்பு உயரும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மரியாதை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கு இடையே எதிர்பாராத விதமாக புரிதல் ஏற்பட வாய்ப்புகள். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.