மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணிகளில் கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன் கோபத்தை தவிர்த்து கொள்வதன் மூலம் மனஅமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. பாரபட்சமின்றி நியாயத்தின் பக்கம் நின்றால் வெற்றி நிச்சயம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அறிவு பூர்வமான விஷயங்களை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சந்தேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி கொள்வது நல்லது. வெளியிட பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நயமாக பேசி எதையும் சாதிக்கக் கூடிய தைரியம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை பூட்டி வைக்காமல் வெளிப் படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்களை மனதில் கொள்ளாமல் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனைவி வழியில் சில சுப செய்திகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய அன்பு வியப்படையச் செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் எதிரிகளை வீழ்த்துவதற்காக வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தேவையற்ற விஷயங்களில் பணத்தை விரயம் செய்யாமல் சமயோசிதமாக முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன நிலை காணப்பட்டாலும் பெரிய பிரச்சினைகளில் ஒன்றும் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இந்த சக ஊழியர்கள் உடைய ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் தீர்வதற்கான விடை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் விசேஷ வைபவங்களில் முன்னின்று செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வராது என்று நினைத்த சில விஷயங்கள் கூட முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் பெறுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் இடையூறுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் அக்கறை தேவை.