மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வார்த்தையில் கொஞ்சம் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பிடிக்காத விஷயங்களை மனதில் நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய நாளாகத்தான் இருக்க போகின்றது. வாராக் கடன் வசூலாகும். ஏதாவது முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திட வேண்டும் என்றால் இந்த நாள் நல்ல நாள். உங்களுடைய பேச்சாற்றல் உங்களுக்கு நிறைய பாராட்டுகளையும் வெற்றிகளையும் குவிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். சுபச் செலவுகள் இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள். பொன் பொருள் ஆபரண சேர்க்கை இருக்கும்.
கடகம்:
கடகராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவை. நிதானத்தோடு நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றியை தரும். பதட்டத்தை குறைத்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பு சிவன் கோவிலுக்கு சென்று விட்டு அதன் பின்பு வேலையை தொடங்குங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்பட போகின்றது. உங்களுடைய புத்தி கூர்மையால் வேலை செய்யும் இடத்தில் பெரிய பாராட்டுகள் குவியும். இருப்பினும் தலைகனம் கூடாது. அமைதி காப்பது உங்களுடைய பெயர் புகழை இன்னும் கொஞ்சம் உயர்த்தும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். எந்த வேலையாக இருந்தாலும் ஒரு கை இறங்கி பார்த்துவிடலாம் என்று நினைப்பீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. அகல கால்வைக்கும் முன்பு ஒரு முறை யோசிக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக அமையப்போகின்றது. காரணம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு தேவையான நிறைய வேலைகளை என்று செய்யப் போகிறீர்கள். உங்களுடைய திறமையான செயல்பாடுகள் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும். மனதில் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல என்ற முயற்சிகளை எடுக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய செயல்பாடும் சிந்தனையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யக் கூடிய வகையில் அமையும். நான்கு பேரின் ஆசீர்வாதத்தை பெற்று உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும். பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப்போடுங்கள். வேலையில் சோம்பேறித்தனம் வேண்டாம். கொஞ்சம் உற்சாகத்தோடு செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அவசரப்படாதீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக அமையப்போகின்றது. சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செயல்படுத்தி அதில் வெற்றியும் காண்பீர்கள். பெயர் புகழ் உங்களை தேடி வரும். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியான நாளாக இருக்கப்போகின்றது. எந்த வேலையை கொடுப்பார்கள் எப்போது அதை செய்து முடிப்போம் என்று காத்திருப்பீர்கள். அறிவுத்திறன் புத்திக்கூர்மை உங்களை வாழ்க்கையில் மேலிடத்திற்கு கொண்டு செல்லும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று அலைச்சல் ஆன நாளாகத்தான் இருக்கப்போகின்றது. உடல் சோர்வு காணப்படும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை காய்கறிகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மன உளைச்சல் ஏற்படும். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்.