மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எதையும் எதிர்பார்த்து செய்வதை தவிர்த்துவிடுவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக கூடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் மனதில் நினைத்த காரியம் நடைபெறும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு உறுதுணையாக உங்கள் குடும்பத்தார் இருப்பார்கள். தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்த்து உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். சுயதொழிலில் எதிர்பார்க்கக்கூடிய லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக் குறை ஏற்படலாம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய செயலுக்கு வெற்றியை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுயதொழிலில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டும் வல்லமை பிறக்கும். உங்களுடைய உறுதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் வரக்கூடிய பணம் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தொலை தூர இடங்களுக்கு பயணம் செல்லும் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் வளரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தள்ளிப் போடுவது நல்லது. சுபகாரியத் தடைகள் நீடிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடையற்ற சில அற்புதமான விஷயங்களை அனுபவிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உங்களை விட்டு சென்ற சிலர் தானாகவே முன் வந்து மன்னிப்பு கேட்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த விஷயம் ஒன்று நடக்க இருக்கிறது. உங்களுடைய இழுபறியான சில வேலைகள் கூட எளிதாக செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகளை கேட்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை சிக்கனம் மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையின் பலம் அதிகரிக்கும். மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வேலை ஆட்களை நியமிக்கும் பொழுது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மன சோர்வு ஏற்படலாம்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் பெரியவர்களை அனுசரிப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட நேரலாம்