மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் குறையும், புதிய தன்னம்பிக்கை மலரும் இனிய நாள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் சிறு சிறு மனஸ்தாபங்களை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருமை உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளூ அதிகரித்து காணப்படும். இதனால் உடலில் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமையை மேலும் மேலும் சிலர் பரிசோதிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுக்கு ஏற்ற வரவு வந்து சேரும். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு குறித்த நேரத்தில் வேலையை செய்ய முடியாமல் போகலாம் எனவே திட்டமிடுவது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க சுபாவம் மற்றவர்களுக்கு பலமாக மாறக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் உண்டு. வியாபார விருத்தி பெற புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாகக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. சமுதாயத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் வரக்கூடும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சிக்கல் மேலும் விரிவடையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேராசை பெரு நஷ்டம் ஆகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய இனிய நாள் என்பதால் தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பக்தியின் பக்கம் அதிகம் நாட்டம் இருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்: துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமம் பார்க்காமல் உங்களுடைய வேலையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சி திருவினையாக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். எளிதாக எதுவும் உங்களுக்கு கிடைக்காது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம், முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு பாராட்டுக்கள் குவிய கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல மறைய தொடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் சலுகைகள் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தடைபட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் தடங்கல் வரலாம், எனினும் தடைகளை தகர்த்து எறிந்து வெற்றி நடை போடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாகும் எனவே கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கஷ்டம் தரும் சிரமங்கள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற மூன்றாம் மனிதர்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். தேவையான இடத்தில் குரலை உயர்த்தியும், மற்ற இடங்களில் நிதானமாகவும் இருந்து உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் பல கிடைக்கக்கூடிய இனிய வாய்ப்புகள் அமையும்.