மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் காணலாம். தொலை தூர இடங்களிலிருந்து எதிர்பாராத செய்திகள் வரும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. வெளியிட பயணங்கள் அனுகூல பலன் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வுற்று காணப்படக்கூடிய வகையிலான அமைப்பு என்பதால் ஓய்வு தேவை. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை சந்திக்க நேரலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகளை பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகத்தின் மீதான மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். முகத்தில் ஒரு பொலிவு உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். சுப காரிய முயற்சிகளில் தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் அனுகூலம் தரும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவற விடாமல் இருப்பது நல்லது. போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகளில் நல்ல லாபம் காணலாம். கணவன் மனைவி இடையே நீண்ட நாள் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். சுபகாரியத் தடைகள் விலகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சுவார்த்தையை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திடீர் திருப்பங்கள் சந்திப்பீர்கள். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் வலுவாகலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பணியாட்களை நியமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னெச்சரிக்கை தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கவலைகளை மறந்து உங்கள் வேலையை கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்றம் காண்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் சஞ்சலம் ஏற்படும். எந்த ஒரு முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளி போடுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் கணிசமாக உயரும். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை கொடுத்துக் கொள்வது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வீண் சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் நீடிக்கும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. இறைவழிபாடுகளின் மீது ஆர்வம் செலுத்துவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் சேர வாய்ப்புகள் உண்டு.