மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் நினைத்த விஷயங்களை எல்லாம் சாதித்து காட்ட கூடிய வெற்றி நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுதல் நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். வியாபாரம் செழிக்க புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. பெண்களுக்கு தைரியம் உண்டாகும். ஆரோக்கியம் நலம் பெறும். துன்பங்கள் தொலைய துளசி வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. எதிலும் வெற்றி காண கூடிய அமைப்பாக இருப்பதால் உள்ளம் மகிழ்வீர்கள். சுயதொழில் புரிபவர்கள் தங்களுடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு பெருகும். உத்யோகத்தில் தங்களுடைய கடமைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு பணவரவு உண்டு. நிம்மதி பெற முருகனை துதியுங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் மறக்க முடியாத நாளாக அமைய இருக்கிறது. சுயதொழில் புரிபவர்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காணும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவி அன்பில் ஒற்றுமை இருக்கும். பெண்களுக்கு தன்னிறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அம்பிகையை வழிபடுவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வைராக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் நலனில் அக்கறை கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கும். வேண்டியதை அடைய வேங்கடவனை வழிபடுவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய செய்திகள் கிடைக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்தாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் ஈகோவை தவிர்த்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும். வேல் முருகனை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்தேற கூடியதாக அமைய இருக்கிறது. தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. துன்பங்கள் தீர ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய நேர்மறையான அணுகுமுறையால் மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மறைமுகப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு ஓங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நன்மைகள் நடைபெற நந்தியம் பகவானை வழிபடுவது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதில் தயக்கம் காட்ட கூடாது. கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும். நல்லது நடக்க பெருமாள் வழிபாடு செய்யுங்கள்
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி பேச்சில் இனிமை தேவை. பெண்கள் சுயமாக சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. கவலைகள் தீர கந்தனை வழிபடுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை செயல்படுத்துவதில் அதிர்ஷ்டம் உண்டு. வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் மேல் அதிகாரிகளுடன் இணக்கமான செல்வது நல்லது. பெண்களுக்கு தங்கள் தரப்பு நியாயங்களை கூறுவதற்கான நேரம் அமையும். மன அமைதி பெற மகேஸ்வரனை வழிபடுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உங்களை சுற்றியுள்ள மறைமுக பகைவர்களின் தொல்லைகள் நீங்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடக்கும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். மன இறுக்கத்தில் இருந்து விடுபட சிவ மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.