மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி உண்டாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொழில் துறையில் இருப்பவர்களுக்கு பன்மடங்கு லாபம் பெருகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள கூடிய வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். ஆரோக்கியம் சிறக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வம்பு வழக்குகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற மனக்கசப்புகள் நீங்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொது காரியங்களில் கூடுதல் அக்கறை செலுத்த கூடிய வகையில் அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய ஆவணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுலபமாக செய்யக் கூடிய சில விஷயங்கள் கூட கஷ்டப்பட்டு முடிக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள கூடிய அற்புத நாளாக அமையும் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு புதுமை படைக்கும் நாள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வருங்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிலிருக்கும் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை எதிர்ப்பவர்களை சுலபமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் உபயோகமாக சில விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருப்பங்களை தாங்களாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு ஒத்துழைப்பு கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாதியில் நின்ற வேலைகள் கூட முடிக்கக் கூடிய பாக்கியம் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்க இருக்கிறது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களை சுற்றி உள்ளவர்களின் போட்டி பொறாமைகள் நீங்கி நன்மைகள் நடக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பான மனநிலையைக் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனினும் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிடாமல் இன் முகத்துடன் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.